கோட்டை பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.3.98 லட்சம்
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் உண்டியலில், 3.98 லட்சம் ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்தது. சேலம், கோட்டையில் அழகிரிநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் இரண்டு உண்டியல், பெருமாள் சன்னதியில் ஒரு உண்டியல், தாயார் சன்னதியில் ஒரு உண்டியல், சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு உண்டியல் என, ஐந்து உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதத்தில், ஐந்து உண்டியல்கள் மூலம் இரண்டு லட்சத்து, 2,299 ரூபாய் வசூலாகனது.சேலம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறநிலையத்துறை ஆய்வாளர் உமாதேவி, செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில், உண்டியலில் இருந்த காணிக்கை நேற்று எண்ணப்பட்டன. உண்டியல், காணிக்கையாக, மூன்று லட்சத்து, 98, 373 ரூபாய் இருந்தது. இதுதவிர, 35 கிராம் தங்கம், 42 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.