உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் பிரம்மரதம் ஏறும் வைபவம்
ADDED :4328 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம் நாளை நடக்கிறது. இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வைஷ்ணவ பக்தர்களுக்கு தீட்சை எனப்படும் பஞ்சசமஸ்காரம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4மணி வரை பக்தர்களின் பஜனை, சுவாமி விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு கைசீகபுராணம் வாசிக்கும் வைபவம் நடக்கிறது. திருமாளுக்கு 12 முறை துவாதசி ஆராதனை நடக்கும். காலை 7:30 மணிக்கு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஜீயர் மடத்தை அடைந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.