உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவில் கட்ட இன்று கால்கோள் விழா

ஐயப்பன் கோவில் கட்ட இன்று கால்கோள் விழா

முசிறி: புதிய ஐயப்பன் கோவில் கட்டுவதற்கான கால்கோள் விழா இன்று நடக்கிறது. முசிறி கைகாட்டியில், தமிழகத்தில் எங்கும் காண முடியாத அளவிற்கு, முசிறி நகரில் மட்டும் ஒரே வீதியில் அடுத்தடுத்து புனித மரியன்னை கிறிஸ்துவ ஆலயம், அதனை தொடர்ந்து, 50 அடி தூரத்தில் மாரியம்மன் கோவில், அடுத்து சையது மீரான் பள்ளி வாசல், அடுத்ததாக ஸ்ரீபாலதண்டாயுதபாணி முருகன் கோவில் என, ஒரே வீதியில் அனைத்து சமுதாய வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளது. மதச்சண்டை, ஜாதி சண்டை என மக்கள் பிளவுபட்டு வரும் சூழ்நிலையில், முசிறி நகரின் மையப்பகுதியில் அருகருகே இத்தகைய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளன. முசிறி நகரில் அனைத்து இன மக்களும் சகோதர மனப்பான்மையுடன், விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருவதால், எவ்வித கலவரங்களும் இதுநாள் வரை நடந்ததில்லை.தோன்றியதில்லை. இந்நிலையில் முசிறிக்கு மகுடம் வைத்தாற்போல், அதே வீதியில் புதிதாக ஐயப்பன் கோவில் கட்ட, பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தீர்மானித்து, அதற்கான பூமி பூஜைகள் நடந்தேறின. இதைத் தொடர்ந்து இன்று நடந்த கால்கோள் விழா, வாஸ்து பூஜை நடக்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஜெயபாலன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !