உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உ.வே என்பது ஏன்?

உ.வே என்பது ஏன்?

தமிழ்த்தாத்தாவை உ.வே.சா என்று சுருக்கமாக  குறிப்பிடுவர். இதற்கு  உத்தமதானபுரம்  வேங்கடசுப்பையரின் மகன் சாமிநாதய்யர் என்பது பொருள். ஆனால்,  வைணவச்  சொற்பொழிவாளர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் உ.வே. என்று சேர்த்துக் குறிப்பிடுவர். இது உபய வேதாந்த என்பதன் சுருக்கம். உபயம் என்பதற்கு இரண்டு என பொருள். ரிஷி பிரபந்தம், ஆழ்வார் பிரபந்தம் என குறிப்பிடப்படும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் நல்ல புலமையும், ஞானமும் பெற்றவர்கள் என்பதையே உபய வேந்தாந்த என்ற சொல் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !