உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

தேங்காயிலுள்ள மட்டை, நாரை உறிக்கிறோம். ஓட்டை உடைக்கிறோம். உள்ளே இனிக்கும் பொருள் உள்ளது. அது போன்று ஆணவம்(அகந்தை), கன்மம்(முற்பிறவி பாவம்), மாயை(இப்பிறவியில் செய்யும் தவறுகள்) இவை மூன்றையும் நீக்கினால், இனிய இறைவனைக் காணலாம். வாழை மரத்தைச் சுற்றி பல கன்றுகள் வந்து கொண்டேயிருக்கும். வாழையடி வாழையாக தொடர்வது போல, நம் குலமும் வம்சமும் விருத்தியடையவும், எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில்(பழுத்தபழமான பிறகு) இம்சை இல்லாமல் இறைவனின் திருவடியில் சேரவும் வாழைப்பழம் படைக்கிறோம். லட்சுமி கடாட்சத்திற்காக வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூல நைவேத்யம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !