உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கம் வாங்கணுமா?

தங்கம் வாங்கணுமா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். இவர்களுக்கு அந்தக் காலத்தில் சம்பளம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இரவு பூஜை முடிந்து நடை சாத்தும்போது, இங்குள்ள சுவர்ண கால பைரவர் சந்நிதியில், தீட்சிதர் ஒருவர் செப்புத் தகட்டை வைத்து விட்டு புறப்படுவார். மறுநாள் காலையில், பைரவர் அருளால் அத்தகடு தங்கமாக மாறி விடும். அதையே தனக்குரிய சம்பளமாக ஏற்றுக் கொள்வார். இங்குள்ள சுவர்ண கால பைரவரை வழிபட்டால் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !