உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இசை பிறந்தது எப்படி?

இசை பிறந்தது எப்படி?

படைப்பவரான பிரம்மா மட்டுமே, ஒவ்வொரு முறை உலகம் அழியும் போதும் இறந்து போவார். உலகம் தோன்றியதும் அவரே இறைவனால் முதலில் எழுப்பப்படுவார். இவ்வாறு அவர் 32 முறை பிறந்து இறந்திருக்கிறார். அந்த 32 பிரம்ம தலைகளையும், நடராஜர் தனது கழுத்தில் அணிந்திருப்பார். உலகமே அழிப்பதும், ஆக்குவதும் தானே என்பது சிவனின் இந்த அரிய கோலம். அவர் நடனம் ஆடும் போது, தலையில் இருக்கும் பிறைநிலவில் இருந்து அமிர்தம் வழிந்து, இந்த தலைமாலையில் விழும். அமிர்தம் பட்டால் இறந்ததும் உயிர் பிழைத்து விடும். உயிர் பிழைக்கும், அந்த தலைகள் நடராஜரைப் புகழ்ந்து பாடும். பாட்டும், ஆட்டமும் இணையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. இதனால் தான், இசை, நடனக் கலைஞர்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !