திருமணமான பெண்ணை புகுந்த வீட்டில் முதலில் விளக்கேற்றச் சொல்வது ஏன்?
ADDED :4362 days ago
விளக்கு இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவது போல, மருமகளாக வரும் மணப்பெண் குடும்பத்தை விளங்கச் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் விளக்கேற்றச் சொல்கின்றனர். குடும்பத்தில் பெண்ணுக்குத் தேவையான அன்பு, சாந்தம், பொறுமை, சமயோஜிதம், விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளே விளக்கின் முகங்கள். இவற்றைக் கொண்டவளே ஒரு குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள்.