உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைக்கு ஐநூறு உடலுக்கு ஐயாயிரம்!

கைக்கு ஐநூறு உடலுக்கு ஐயாயிரம்!

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய், செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இருந்தாலும், எளிமையாக வாழ்ந்தார். அவரிடம் ஒருநாள் திடகாத்திரமான இளைஞன் ஒருவன் உதவி கேட்டு வந்தான்.  ஐயா! என் தகப்பனார் கால் இல்லாதவர். அவரால் சம்பாதிக்க முடியவில்லை. என் குடும்பத்திற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள்  என்றான்.  சோம்பேறியான அந்த இளைஞனுக்கு, உழைப்பின் பெருமையை உணர்த்த விரும்பினார்.  உனக்கு தற்காலிகமாக உதவி வேண்டுமா? அல்லது நிரந்தர உதவி வேண்டுமா? என்று கேட்டார். நிரந்தர உதவி தானே நல்லது. அதையே செய்து விடுங்கள்! என்றான்.  உன் வலது கையை வெட்டி என்னிடம் கொடுத்து விடு. ஐநூறு ரூபிள் கொடுக்கிறேன் என்றார் டால்ஸ்டாய். அவன் அதிர்ச்சியுடன் ஒரு கையை வெட்டினால் தான் ஐநூறு ரூபிளா? என்று கேட்க.... அப்படியானால்... ஒன்று செய்யலாம். இரண்டு கைகளையும் வெட்டிக் கொடு. ஆயிரமாக வாங்கிக் கொள், என்றார். அவன் பயத்தில் வெளுத்துப் போனான்.  டால்ஸ்டாய் அவனிடம், உனக்கு இன்னும் பணம் போதவில்லை என நினைக்கிறேன். உன் உடம்பையே எனக்கு விற்றுவிடு. மொத்தமாக ஐந்தாயிரம் ரூபிள் வாங்கிக் கொள் என்றார்.  பேச்சு மூச்சற்றுப் போனான்.  டால்ஸ்டாய் அவனிடம், நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். உன் இஷ்டப்படி செய்யலாம். இந்த உடம்பைக் கொண்டு உழைத்தால், இன்னும் பல ரூபிள்களை நீ சம்பாதிக்கலாம். ஆனால், இதை விலைக்கு வாங்கினால், அவ்வளவு தான் என்னால் தரமுடியும், என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். அவன் கதறியபடியே,  ஐயா! இவ்வளவு காலம் சோம்பேறியாக இருந்து விட்டேன். வாழ்வு வளம் பெற உழைப்பு ஒன்றே நிரந்தர தீர்வு என்பதை உணர்ந்து விட்டேன்  என்று சொல்லி புறப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !