கிறிஸ்துமஸ் ஆராதனை!
ADDED :4358 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.சி., சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி., சபைகள் இணைந்து, ஆர்.சி. பள்ளியில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தின. சபைகுருக்கள் ஜோசப், டேவிட், யோபுஞானையா மற்றும் திருச்சபையினர் கலந்து கொண்டு, கிறிஸ்து பிறப்பின் மகிமைகள் குறித்து பாடல்கள் பாடினர். செட்டியபட்டி ஆர்.சி., பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.