தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் திருவிழா
உடன்குடி: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி தேரியில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோயில். இங்கு கார்த்திகை மாதம் முதல் நாளில் துவங்கும் இத்திருவிழாவின் முப்பதாவது நாளில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி துவங்கியது.விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் மற்றும் வில்லிசை நடக்கிறது.விழாவில்நேற்று காலை 1 மகளிர் வண்ண கோலமிடும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு உற்சவர் திருவீதியுலா ஆகியன நடந்ததுஇன்று காலை 6 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளி குடத்தில் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்வதும் மாலை 4.30 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரிக்குன்றில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பார்கள் கள்ளர்வெட்டு நடந்ததும் கள்ளர்வெட்டு நடந்த இடத்தில் இருந்து பக்தர்கள் போட்டிபோட்டு மணல் எடுப்பார்கள்.தொடர்ந்து புனித மணல் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.