தூய சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
ADDED :4358 days ago
திருநெல்வேலி: பாளை., தூய சவேரியார் பேராலயம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா பாளை., யில் நடந்தது.விழாவில் டாக்டர் அனிதா சதீஷ், கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினார். கிறிஸ்துமஸ் அடையாள நிகழ்ச்சி, நடித்துக் காட்டுதல், கிறிஸ்துமஸ் பாடல், விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது.கிறிஸ்து பிறப்பு செய்தியை வளன் அரசு வழங்கினார். பேரலாய பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகள் ஆசியுரை வழங்கினார். இதில் துணை பங்கு தந்தைகள் ராபின், வில்சன், பங்கு பேராலய உதவித் தலைவர் நல்லாசிரியர் பீட்டர், சவேரியார் பேரலாய அன்பியம் ஒருங்கிணைப்பாளர் ஹெர்பட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேராலய இறை மக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.