உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையத்தில் 25ல் மண்டல பூஜை

கடையத்தில் 25ல் மண்டல பூஜை

ஆழ்வார்குறிச்சி: கடையத்தில் சபரிமலை சாஸ்தாவின் 21வது ஆண்டு மண்டல பூஜை விழா நடக்கிறது. கடையம் ஐயப்ப பக்தர் குழு சார்பில் சபரிமலை சாஸ்தா 21வது ஆண்டு மண்டல பூஜை வரும் 25ம்தேதி முப்புடாதி அம்மன் கோயிலில் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை, மாலை 6 மணிக்கு ஐயப்பன் சப்பர வீதியுலா, இரவு 9 மணியளவில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கடையம் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !