உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா!

சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கருமாபுரம் புதூர் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. பொள்ளாச்சி நெகமம் அடுத்த கருமாபுரம் புதூர் சீனிவாசப்பெருமாள் கோவில், வலம்புரி விஸ்வக் சேனர் மற்றும் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் மகாகும்பாபிஷேக விழாவையொட்டி எஜமான தேவதா அனுக்ஜை, வாசுதேவ புண்யாகவாஜனம் வாஸ்து சாந்தி, மிருத்சஸ்கிரஹனம், அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசமும், இரண்டு கால ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சொர்ண ஆகர்ஷண பைரவர் வலம்புரி விஸ்வக்சேனர் பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், மகா நிவேதனம், சாற்றுமறை தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !