ஆனைமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை
ADDED :4358 days ago
ஆனைமலை :ஆனைமலை ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. மார்கழி முதல் நாளான இன்று, ஆனைமலை ஐயப்ப பக்தர்கள் சேர்ந்து நடத்தும் மண்டல பூஜை திருவிழா, அதிகாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு ஆராட்டு வைபவமும், காலை 10:00 மணிக்கு மகாஅபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை செய்த பின் அன்ன தானம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைப்பெறும்.