ரிஷிவந்தியம் பகுதியில் விவேகானந்தர் ரதம்
ADDED :4358 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் நேற்று 150வது பிறந்த நாளையொட்டி விவேகானந்தர் ரதம் வந்தது. ரிஷிவந்தியத்தில் நேற்று ரிஷிவந்தியம், பிரிவிடையாம்பட்டு, பாளையம், முட்டியம், வெங்கலம், மண்டகப்பாடி கிராமங்களில் விவேகானந்தர் ரதம் வந்தது. அப்பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு அவருடைய ரதம் கொண்டு செல்லப்பட்டது. விவேகானந்தர் படத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மாலையணிவித்து வரவேற்றனர். மண்டகப்பாடி பள்ளியில் நடந்த சொற்பொழிவின் போது பட்டதாரி ஆசிரியர் சுப்பம்மாள் வரவேற்றார். விவேகானந்தர் குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், முருகேசன் கூறினர்.