உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

திருத்தணி: மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு, சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை, மூன்று கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !