உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் திருப்பாவை பாடி சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் திருப்பாவை பாடி சிறப்பு பூஜை

நகரி: மார்கழி மாதத்தையொட்டி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், சுப்ரபாத பாடல்களுக்கு பதிலாக, திருப்பாவை பாடல்கள் பாடி, சிறப்பு பூஜை நடைபெற்றது. நகரி, நாராயணவனம், நாகலாபுரம் டவுனில் அமைந்துள்ள, வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று, மார்கழி மாத பிறப்பையொட்டி, அதிகாலையில், சுப்ரபாத பாடலுக்கு பதிலாக, அர்ச்சகர்கள், திருப்பாவை பாடல்களை பாடி, பூஜை செய்தனர். பின், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நாகலாபுரத்தில், வேத நாராயணசாமி கோவில், நாராயணவனத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கார்வேட் நகரத்தில், வேணுகோபால சுவாமி கோவில், நகரியில், கரியமாணிக்க பெருமாள் கோவில், நகரி அடுத்த சத்திரவாடா கிராமத்தில் கரிவரதராஜ பெருமாள் கோவில், வடமால்பேட்டை அடுத்த அப்பலாயகுண்டா கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில், மார்கழி மாதம் முழுவதும், ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !