காளஹஸ்தி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.09 கோடி
ADDED :4356 days ago
நகரி: காளஹஸ்தி கோவிலில், உண்டியல் மூலம், 1.09 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்து உள்ளது. காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரசுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை, எண்ணும் பணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த, நவ., 1ம் தேதியிலிருந்து, இம்மாதம், 14ம் தேதி வரை, கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 1,09,24,951 ரூபாய் வசூலானது. மேலும், 106 கிராம் தங்கம், 521 கிலோ, வெள்ளி பொருட்கள், 202 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.