உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலச விளக்கு வேள்வி பூஜை

கலச விளக்கு வேள்வி பூஜை

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், உலக நன்மைக்கான கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் சக்தி மாலை அணிதல் விழா நடந்தது. செஞ்சி வட்ட ஆன்மிக இயக்க துணை தலைவர் பரசுராமன் சக்தி கொடி ஏற்றி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜவேலாயுதம், மேல்வைலாமூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் வேலு ஆகியோர் கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தனர். மன்ற பொறுப்பாளர் முத்து கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி வட்ட வேள்விக்குழு ஜான்சி, வெண்ணிலா, வசந்தி, ராணி, அண்ணாமலை, மணி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !