ஏழுமலையானுக்கு இன்று முதல் திருப்பாவை சேவை தொடக்கம்!
ADDED :4355 days ago
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் அதிகாலையில்சுவாமியைத் துயில் எழுப்ப சுப்ரபாத சேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதில் ஆண்டாள் பாசுரமான திருப்பாவை பாடி பெருமாளைத் துயில் எழுப்புவது வழக்கம். இன்று முதல் திருப்பாவை பாடி திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும்.