உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் அன்னதானம்: உணவுப்பொருள் அனுப்பி வைப்பு!

சபரிமலையில் அன்னதானம்: உணவுப்பொருள் அனுப்பி வைப்பு!

தஞ்சாவூர்: சபரிமலையில், பம்பாவில் ஏழாம் வருடமாக பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் வகையில், தஞ்சையிலிருந்து உணவு பொருட்களை வாகனத்தில் அனுப்பும் நிகழ்ச்சி அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் நடந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டம் சார்பில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவினர் ஏழாம் ஆண்டாக, சபரிமலையில் அன்னதான நிகழ்ச்சிக்கு உணவுப்பொருள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஒரு லாரி நிறைய அரிசி, பருப்பு, காய்கறி உள்பட உணவு பொருட்களுடன், 50 தொண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா தஞ்சை யாகப்பா நகரிலுள்ள ஐயப்பன் சன்னிதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், சங்க மாநில கவுரவ தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை ஸ்பாடிக்ஸ் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சந்திரசேகரன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாண்டுரங்கன், சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !