விஸ்வேஸ்வரசாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :4355 days ago
திருப்பூர்: திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த 9ம் தேதி மாணிக்கவாசகர் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவ பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை 4.00 மணிக்கு மகா அபிஷேகம், காலை 6.30 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை ஆகியன நடக்கிறது.