உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி துவக்கம்!

சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி துவக்கம்!

சென்னை: சென்னையில் எட்டு நாட்கள் நடத்தப்படும், மார்கழி மாத இசை நிகழ்ச்சியான, "சென்னையில் திருவையாறு நேற்று துவங்கியது. லஷ்மன் சுருதி இசைக் குழு, "சென்னையில் திருவையாறு என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதன் 9ம் ஆண்டு துவக்க விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. துவக்க நிகழ்ச்சியில், பி.எஸ்.நாராயண சுவாமி தலைமையில், கலைஞர்கள், பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடினர். திரைப்பட நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக, பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ""உலக அளவில் நடத்தப்படும், மார்கழி மாத இசை நிகழ்ச்சிகளில், சென்னையில் தான், அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. "சென்னையில் திருவையாறு அதற்கு முக்கிய சான்று, என்றார். முதல் நாளான நேற்று, மோகன்தாசின் நாதஸ்வரம்; பிர்ஜு மஹராஜின் கதக் நடனம்; நித்யஸ்ரீ மகாதேவனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.வரும், 25ம் தேதி வரை நடக்கும் இசை விழாவில், கர்நாடக இசை உலகின் பிரபல கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !