நாகையில் ஆருத்ரா விழா!
ADDED :4351 days ago
நாகப்பட்டினம்: நாகையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜப் பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆருத்ரா தரிசனத்தையடுத்து நேற்று திருவாதிரை விழாவை முன்னிட்டு, நாகை ஆரிய நாட்டுத் தெருவில் அமைந்துள்ள, நடராஜர் மடத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நடராஜ பெருமான், அம்பாளுடன் தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வாமி தரிசனம் செய்தனர்.