மாதா சிலை கண் திறந்து பார்த்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு!
ADDED :4343 days ago
புதுச்சேரி: மாதா சொரூபம் கண் திறந்து பார்த்ததாக தகவல் பரவியதால், புதுச்சேரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியா வீதியில், புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், தற்போது இந்த ஆலயம் அழகுபடுத்தப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 2.00 மணிக்கு ஆலயத்தின் உள் பகுதியில் விளையாடிய சிறுவர்கள், அங்குள்ள மாதா சிலை, கண் திறந்து தங்களைப் பார்த்ததாக, பெற்றோர்களிடம் கூறி உள்ளனர்.இத் தகவல், ”ற்றுப்புற பகுதியில் @வகமாகப் பரவியது. ஏராளமான பொதுமக்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கண் திறந்து பார்த்ததாக கூறப்பட்ட மாதா சிலைக்கு மெழுகு வர்த்தி ஏற்றி வழிபட்டனர். இதனால், புதுச்சேரியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.