உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கண்காணிப்பு கேமரா!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கண்காணிப்பு கேமரா!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் திருட்டை தடுக்க போலீஸ் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, கேமரா பொருத்தி காண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்களிடம் பணம், நகைகள் நூதன முறையில் திருடப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் சிலர் புகார் கொடுத்தும் திருடர்களை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறினர். திருட்டை தடுக்க அக்னி தீர்த்த கரையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அருகே போலீஸ் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். புறக்காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ள 7 போலீசாருடன், ஊர்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபடவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !