உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

சென்னை: மானசரோவர், முக்திநாத் புனித தலங்களுக்கு சென்று வந்த, யாத்ரீகர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. இதில், பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்கிநாத் புனித தலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும், மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு புனித தலங்களுக்கும் சென்று வந்த, தலா, 250 பேருக்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அவற்றிலிருந்து குலுக்கல் முறையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18க்குள், விண்ணப்பிக்க வேண்டும். www.tnhrc e.org என்ற இணைய முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !