கிறிஸ்துமஸ் சிந்தனைகள் - 6: உங்கள் முடிவு என்ன?
ADDED :4326 days ago
இறைவார்த்தைகளுக்கு கட்டுப்படுபவர்களுக்கு, இடர்களையும், இன்னல்களையும் எதிர்கொள்வதற்கான துணிவை, ஆண்டவர் அருள்வார். இந்த மண்ணுலகை வயலுக்கு ஒப்பிடலாம். இயேசுவினால், அன்பு, அமைதி, சமாதானத்திற்கான அருட்சாதனங்கள் அதில் விதைக்கப்படுகின்றன. மனதிற்குள் அதை உள்வாங்கி வாழ்பவர்கள், நல்ல விதைகள். சாத்தான், அதற்குரிய கேளிக்கைகளை அதே வயலில் விதைக்கிறான். அந்த உல்லாசத்தில் மதிமயங்கி கேடுகெட்ட வாழ்க்கை நடத்துபவர்கள் களைகள்.அறுவடை என்பது உலக வாழ்க்கையின் முடிவு. வானதூதர்கள், நேர்மையாளர்களையும், மதிகெட்டவர்களையும் தனியாக பிரிப்பர். நேர்மையாளர்கள், ஆண்டவரின் சந்நிதியில் ஒளிவீசுவர். தீயவர்களோ, வயலில் முளைக்கும் களை போல் ஒதுக்கப்படுவர். இதில் நாம் எங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் பொறுப்பு.