திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.89 லட்சத்தில் தடுப்புகள்!
ADDED :4343 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ரூ. 89.65 லட்சத்தில் சில்வர் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுகின்றன. கோயிலில் லட்சுமி தீர்த்தம், சண்முகர் சன்னதி, மகாமண்டபம் வழியாக இலவச தரிசனத்திற்கும், திருவாட்சி மண்டபம், மடப்பள்ளி, கோவர்த்தனாம்பிகை, அன்னபூரணி சன்னதி வழியாக கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்லும் வகையில் தடுப்பு உள்ளதால், விழா காலங்களில் நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் ஒரே வரிசையாக செல்லவும், தரிசிக்கவும் சில்வர் கம்பி தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது.