அவனி வந்த வேந்தன்!
ADDED :4345 days ago
அன்னைமரி பாலனாய்
அவனி வந்த வேந்தனே!
மண்ணகத்தில் உந்தனின்
நன்மைகள் தான் பெருகின!
மெய்மறையாம் கிறிஸ்துவம் 266 303, 266 495
அன்பைச் சொல்லும் தத்துவம்
ஒன்றிணைந்து வாழவே
சொன்ன வார்த்தை நித்தியம்
உரிமை வாழ்வு வாழவே
உரைத்திட்ட போதகம்
காலமெல்லாம் உணர்த்திடும்
பாடமாக அமைந்ததே!
பிறர்நேசத் தன்மை தான்
உறவின் உண்மை நெறியென
பாருக்கெல்லாம் பகர்ந்திட
பெத்தலையில் தோன்றினார்.
நற்செய்தி நல்கிய
நன்னெறியின் நாயகன்
மீட்பர் இயேசுபாலனை
வணங்கி இன்று மகிழ்வோம்.