மீனாட்சி அம்மன் கோயிலில் நெரிசலை தவிர்க்க கோரிக்கை
ADDED :4342 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க, இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேலு தலைமையில் நடந்தது. கோயிலில் நெரிசலில் சிக்கி கர்நாடக மாநில மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்களை காத்திருக்க வைத்து, அவர்களை கட்டண தரிசனத்துக்கு உட்படுத்தும் போக்கை மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, நாளை (டிச.,26) கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகள் சுதாகர், முத்துக்குமார், நிர்வாகிகள் பாண்டியன், பா.ஜ., மாவட்ட தலைவர் முத்தணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.