சதுரகிரி மலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
7,500 சதுர அடி மீட்கப்பட்டு மரங்கள் நடவு: வத்திராயிருப்பு, சதுரகிரி மலையில், நடைபாதையில் ஆக்கிரமித்து இருந்து கடைகளுடன் கூடிய 7,500 சதுரஅடி இடத்தை, வருவாய்துறை, போலீசார் முன்னிலையில், அகற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள், அதில் மரக்கன்றுகளை நட்டனர் , சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் நடை பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளால், பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதாக, புகார்கள் எழுந்தன. அந்த கடைகளை அகற்ற முடிவு செய்தனர்.இந்நிலையில், நேற்று மதுரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையில், நிர்வாக அதிகாரி குருஜோதி, அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர், வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். ஒரு சில வியாபாரிகள் தாங்களாகவே, கடைகளையும், பொருட்களையும் அகற்றினர். மற்ற வியாபாரிகள், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கடைகளுக்கு வரவில்லை. இதனால், அகற்றப்பட்ட பொருட்களை, மலையில் உள்ள திருச்சூர் மடத்தில் வைத்து, அதிகாரிகள், "சீல் வைத்தனர். மொத்தம் 37 கடைகள் அகற்றப்பட்டு, 7,500 சதுரஅடி இடம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் அதிகாரிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதனால், கடந்த 2 நாட்களாக, சதுரகிரி மலையில் பதட்ட நிலை ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் எஸ்.ஐ., சங்கையா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.