பழநி கோவில் உண்டியல் வசூல்: ரூ.1.32 கோடி!
ADDED :4673 days ago
பழநி: பழநிமலைக் கோவில் உண்டியலில், 14 நாட்களில், 1.32 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி கோவிலில், டிச., 13ல், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. 14 நாட்களுக்கு பிறகு, நேற்று, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், தங்கம், 400 கிராம், வெள்ளி, 6,650 கிராம், வெளிநாட்டு கரன்சி, 1,142 மற்றும் 1.32 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம், வெள்ளியால் ஆன, தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.