ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல்ரூ.48.46 லட்சம்
ADDED :4335 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல், 30 நாள்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு, பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில், வங்கி ஊழியர்கள் காணிக்கைகளை எண்ணினர். 48 லட்சத்து 46 ஆயிரத்து 318 ரூபாய், 75 கிராம் தங்கம், 6 கிலோ 230 கிராம் வெள்ளி இருந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், மேலாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.