/
கோயில்கள் செய்திகள் / இந்து கோயில் பாதுகாப்புக் குழுவின் பக்தர்கள் பேரவையினரின் 16-வது ஆண்டு கோயில் உழவாரப்பணி
இந்து கோயில் பாதுகாப்புக் குழுவின் பக்தர்கள் பேரவையினரின் 16-வது ஆண்டு கோயில் உழவாரப்பணி
ADDED :4270 days ago
இந்து கோயில் பாதுகாப்புக் குழுவின் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீனாட்சியம்மன் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால், தற்போது மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை அந்தக் குழுவினர் மினாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் உழவாரப்பணியை மேற்கொண்டனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், குடும்பப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 100 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.