உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் இன்று புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்!

பிள்ளையார்பட்டியில் இன்று புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்!

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோயிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சிவகங்கை, பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் நடைபெறும். கற்பக விநாயகர் தங்க கவசத்தில், காட்சி அளிப்பார். புத்தாண்டை முன்னிட்டு, காலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். கோயில் டிரஸ்டிகள், கண்டனூர் சித.நாச்சியப்ப செட்டியார், ஆத்தங்குடி நா.நாச்சியப்ப செட்டியார் ஆகியோர் கூறியதாவது; பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய, நிழற்குடை அமைத்துள்ளோம். குடிநீர், சுகாதார வளாக வசதிகள் செய்துள்ளோம். பகலில் அன்னதானம் வழங்கப்படும், என்றனர்.

சிறப்பு பஸ்: காரைக்குடி, திருப்புத்தூரில் இருந்து, பிள்ளையார்பட்டி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எஸ்.பி.,அஸ்வின் கோட்னீஸ் தலைமையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வாகனங்களை நிறுத்த காரைக்குடி திருப்புத்தூர் ரோட்டில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !