உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பகல்பத்து துவக்கம்!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பகல்பத்து துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பகல் பத்து உற்சவம், இன்று துவங்குகிறது. இதையொட்டி,மாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் பரம்பரையில் வந்த வேதப்பிரான் பட்டர் திருமாளிகையில், மாங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், உட்பட பச்சை காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சீதனமாக வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, பகல் பத்து மண்டபம் சேருவர். திருப்பல்லாண்டு அரையர் சேவை, கோஷ்டி போன்றவை நடக்கிறது. ஜன 11 காலை 7.05 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !