ஐயப்பன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED :4342 days ago
திருப்பூர்: ஐயப்பன் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இன்று நடக்கின்றன. திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இன்று அதிகாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமம், நவ கலச அபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடக்கின்றன. ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. கோவில் முழுவதும், பல்வேறு வகை பூக்களால், அலங்காரம் செய்யப்படும். பகல் 11.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மகா அன்னதானம் நடக்கிறது. மீண்டும் மாலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.