உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னியபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்!

வன்னியபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்!

புதுச்சேரி: வன்னியபெருமாள் கோவிலில், அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், அனுமந்த் ஜெயந்தி உற்சவம் மற்றும் 6ம் ஆண்டு தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(1ம் தேதி) மாலை 6:00 மணியளவில் ஆஞ்சநேயருக்கு வெண்ணைய்காப்பு அலங்காரமும், தீபத் திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீனுவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !