உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம்!

பரமக்குடி பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம்!

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் இன்று துவங்குகிறது. தினமும் காலை, பெருமாள், ஏகாதசி மண்டபத்திற்கு எழுந்தருளி, பஜனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜன., 10, மாலை 5 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் வீதியுலா வந்து பின் நடைசாத்தப்படும். ஜன.,11 காலை 5 மணிக்கு "பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆண்டாள், பெருமாளிடம் சேர்க்கையான, கூடாரவள்ளி உற்சவத்தையொட்டி, மாலை 4 மணிக்கு 108 வட்டிலில் அக்கார வடிசில், வெண்ணெய் படைக்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள், பரமக்குடி அனுமார்கோதண்டராம சுவாமி கோயில்களிலும் விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !