கோவை பகுதிகளில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை
கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்களில் நடந்த அனுமன் ஜெயந்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். துடியலூர் விஸ்வநாதபுரம் அருகே உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் துளசிமாலை, வெற்றிலை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி விநாயகர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், சொக்கலிங்கேஸ்வரர் கோவில், திருமலைநாயக்கன்பாளையம் ரங்கநாதர் கோவில், காளிபாளையம் திருமலைராயர் பெருமாள் கோவில், ஜங்கமநாயக்கன்பாளையம் நவாம்ச ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆகியன நடந்தன. இதுபோல், சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திருவேங்கடநாதப் பெருமாள் சிந்தாமணிப்புதூர் ஆஞ்சநேயர் கோவில், இருகூர் ஆஞ்சநேயர் கோவில், கலங்கல் பெருமாள் கோவில், சங்கமநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் ஆஞ்சநேயர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.