வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை
ADDED :4340 days ago
நாமக்கல்: வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் -மோகனூர் சாலை, சித்தர்மலை அடிவாரத்தில், சக்தி விநாயகர், சித்தேஸ்வரர், வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.