சித்தர் பீடத்தில் ரூ.1.5 கோடியில் நலத்திட்ட உதவிகள்
ADDED :4339 days ago
மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 2014 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கலச விளக்கு வேள்வி பூஜை, கலைநிகழ்ச்சி மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றது. புத்தாணடு விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.