சபரிமலை உபகோவில்கள்சீரமைக்க ரூ. 6.5 கோடி நிதி
ADDED :4337 days ago
சபரிமலை:சபரிமலையில் மாளிகைப்புறம் மற்றும் உபகோவில்கள், 6.5 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கப்படுகின்றன.சபரிமலையில், ஐய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள், மாளிகைப்புறம் அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. கோவிலை சுற்றிலும் மணிமண்டபம், உபதெய்வங்கள், நாகராஜர், மலை தெய்வங்கள், நவகிரகங்கள் அமைந்து உள்ளன. இவற்றை, சமதளத்தில் வாஸ்து முறைப்படி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.வெளிப்பகுதியில், மணிமண்டபம் அமைக்கப்படும். இதில், தந்திரி கருத்து கேட்கப்படும்.