உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 176 அடி உயரத்தில்அனுமன் சிலை

176 அடி உயரத்தில்அனுமன் சிலை

ஐதராபாத்:நாட்டின் மிக உயரமான, அனுமன் சிலை, ஆந்திராவில் அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு, இந்த சிலையின் கட்டுமானம் நிறைவடையும். ஸ்ரீகாகுளம் மாவட்டத் தின், நரசன்னபேட்டா என்ற கிராமத்தில், இந்த சிலை அமைக்கப்படுகிறது. 176 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும், இந்த சிலை தான், நாட்டிலேயே மிக உயரமான அனுமன் சிலையாக இருக்கும்.இப்போதைய நிலையில், டில்லி அருகே உள்ள குருஷேத்ரா வில் உள்ள, 150 அடி உயர அனுமன் சிலை தான், மிக உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது. இரண்டாவது இடத்தில், ஆந்திராவின் பரிதலா என்ற இடத்தில் உள்ள, 136 அடி உயர சிலை விளங்குகிறது.நாட்டின் உயரிய அனுமன் சிலை அமைக்கும் பணி, 2005ல் துவங்கியது; அடுத்த ஆண்டில் கட்டி முடிக்கப்படும், என, சிலையை அமைத்து வரும், அனுமன் பக்தர், எம்.எஸ்.என்.ராஜு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !