சபரிமலையில் 24 மணி நேர சேவை மையம்
ADDED :4340 days ago
சபரிமலை: சபரிமலையில், பக்தர்களின் வசதிக்காக, 24 மணி நேர சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.பொதுவான தகவல்கள், நன்கொடைகள், கோவில் வரலாறு, பூஜை புக்கிங், நேரம், பஸ், ரயில், விமான நேரங்கள், ரூட், போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், எமர்ஜன்சி சர்வீஸ்கள், காணாமல் போன பக்தர்கள் தொடர்பான தகவல்கள், ஆன் லைன் பேமென்ட், கியூ புக்கிங் தகவல்கள், முக்கிய தொலைபேசி தகவல்கள், சபரிமலை யாத்திரை தொடர்பான மற்ற கோவில்களின் தகவல்களை, இந்த மையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.தற்போது, மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில், தகவல்கள் அறியலாம். தெலுங்கு, கன்னட மொழி வசதிகள், பின்னர் ஏற்படுத்தப்படும். சபரிமலை தொடர்பான தகவல்களை அறிய, 0471-255 7788ல் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல்களை, தேவஸ்தானம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.