உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா

மாரியம்மன் கோவில் விழா

ஈரோடு: ஈரோடு, வீரப்பம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் விழா, ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும்.இந்தாண்டு விழா டிசம்பர், 31ம் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 2ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.நாளை மாலை, 5 மணிக்கு காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதலும், எட்டாம் தேதி காலை, 6.30 மணிக்கு பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேகம் செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று மாலை, மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் ஆகியவை நடக்கிறது. வரும், ஒன்பதாம் தேதி காலை, ஐந்து மணிக்கு கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், காலை, ஏழு மணிக்கு சுவாமி நகைகள் எடுத்து வைத்தலும் நடக்கிறது.வரும், 12ம் தேதி மறுபூஜையுடன், விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !