உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜன் சிலைகள்அமைக்கும் பணி

நாகராஜன் சிலைகள்அமைக்கும் பணி

அவலூர்பட்டை ;அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் நாகராஜன் சிலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பின்புற வளாகத்தில் உள்ள வேப்பமரத்தின் அடிப்பகுதியில் மூன்று நாகராஜ சிலைகளை பிரதிஷ்டை செய்து, அடுத்த மாதம் 9 ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.இதை முன்னிட்டு மொடையூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 3 நாகராஜ கற்சிலைகளை, நேற்று முன் தினம் இரவு தண்ணீரில் மூழ்க வைத்தனர். தண்ணீர், நவதானியம் மற்றும் நாணயங்களிலும் 12 நாட்கள் வீதம் 36 நாட்கள் வைக்க முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !