தைப்பூச விழாவிற்கு கூடுதல் பஸ்கள்
திண்டுக்கல்:தைப்பூசத்தை முன்னிட்டு பழநி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 சிறப்பு பஸ்களை இயக்கப்படவுள்ளது. பழநியில் ஜன., 17 ல் தைப்பூச விழா நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள்,பழநிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஊர் திரும்ப, ஏதுவாக 450 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. மதுரை, திருச்சி, காரைக்குடி, தேனி பகுதிகளில் இருந்து பழநிக்கு ஜன., 15 லிருந்து 18 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொது மேலாளர் சாரங்கன் கூறுகையில்,""பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எந்தெந்த பகுதிகளில் கூடுதல் பஸ்கள் தேவைப்படுகிறதோ, அங்கிருந்து பழநிக்கு இயக்கப்படவுள்ளது. வழித்தடங்கள் குறித்து தெளிவுபடுத்துவது, ஆலோசனை அளிப்பது, கண்காணிப்பு பணிக்காக கூடுதல் அலுவலர்கள் பஸ் ஸ்டாண்ட்களில் நியமிக்கப்படுவர், என்றார்.